போர்வையில் தோனி, அஸ்வின் போட்டோ - கலக்கிய ஆடை வடிவமைப்பாளர்

Update: 2025-03-21 08:44 GMT

ஐபிஎல் போட்டியை கொண்டாடும் வகையில் சென்னிமலையை சேர்ந்த நபர் ஒருவர், தோனி மற்றும் அஸ்வின் புகைப்படத்தை போர்வையில் நெய்து அசத்தியுள்ளார். சிஎஸ்கே அணியில் மீண்டும் இடம்பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினை வரவேற்கும் வகையில் தோனி மற்றும் அஸ்வின் புகைப்படத்தை எலக்ட்ரானிக் ஜக்கார்டு தறி மூலம் திரைச்சீலையில் வடிவமைத்துள்ளார். 68 அங்குல நீளமும், 27 அங்குல அகலமும், 430 கிராம் எடை கொண்ட இந்த திரைச்சீலையை தோனி மற்றும் அஸ்வினுக்கு நேரில் பரிசளிக்க ஆவலாக இருப்பதாக ஆடை வடிவமைப்பாளர் அப்புசாமி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்