திருவோடு ஏந்தி நூதன முறையில் போராட்டம் | Tirutani | Protest | ThanthiTV
பணி நிரந்தரம் கோரி, திருத்தணியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், நெற்றியில் நாமம் போட்டு திருவோடு ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2007-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், காலியாக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. வடமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை கைவிட்டு உள்ளூர் மக்களுக்கு வய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.