கோவை காந்திபுரத்தில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் 2 தினங்களுக்கு முன்பாக மதுபாட்டிலுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் கோவை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 இளைஞர்களை கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களும் தவறை உணர்ந்ததாக பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.