நோய் பாதித்து தாய் மரணம் - மனமுடைந்த மகன் தற்கொலை

x

ஆவடி அருகே நோயால் தாய் உயிரிழந்த நிலையில், மனமுடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த வசந்தா என்பவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டை திறந்து பார்த்தபோது, தாய், மகன் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து இருவரின் உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், தாய் வசந்தா மூச்சுத்திணறால் உயிரிழந்ததால், மனமுடைந்த மகன் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்