சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி

Update: 2025-03-24 02:55 GMT

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக வந்த ராணுவ வீரரின் கைப்பையில் இருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்ற ராணுவ வீரர் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரது பையை சோதனை செய்த அதிகாரிகள், எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்தனர். தற்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்