பிரசவம் பார்த்த நர்சுகள்.. ``கர்ப்பப்பை நஞ்சு போச்சு'' - உறவினர்கள் எடுத்த முடிவு

Update: 2025-03-24 03:20 GMT

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு செவிலியர் தவறான சிகிச்சை அளித்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுபோன்று தவறுதலான சிகிச்சை அடிக்கடி நடைபெறுவதாகவும், மருத்துவர் இன்றி செவிலியர்களே பிரசவம் பார்ப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்