டெல்லியில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்திற்கு சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானம், சிம்லா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அவசரகால எந்திரங்களை இயக்கி விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த ஹிமாச்சல பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில டிஜிபி உள்ளிட்ட பயணம் செய்த 44 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.