உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி எம்.பி ராம்ஜி லாலின் வீடு சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் மக்களவையில் பேசும்போது ராஜ்புத் மன்னர் குறித்து ராம்ஜி லால் விமர்சித்து இருந்தார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்புத் சமூகத்தினர், எம்.பியின் வீடு மற்றும் அலுவலகம் மீது கற்களை வீசி சூறையாடினார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.