காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;

Update: 2025-03-27 00:45 GMT
  • மத்திய அரசின் வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்.... முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்......
  • 2025-30 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..... தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவிப்பால் 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்......
  • நாடு முழுவதும் யுபிஐ சேவை முடங்கியதால், ரொக்கம் எடுத்துச் செல்லாத பயனர்கள், பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் திணறல்..... Paytm, Gpay உள்ளிட்ட செயலிகள் முடங்கிய நிலையில், சிறிது நேரத்திற்குப் பின் சரியானதாக தகவல்.....
  • ஏப்ரல் 6ம்தேதி ராமேஸ்வரம் வருகிறார், பிரதமர் மோடி.... புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்....
  • சட்டப்பேரவையில் கூட்டணி கணக்கு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம்... அதிமுக என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு... கணக்கு கேட்டு ஆரம்பித்த கட்சி இப்போது தப்பு கணக்கு போடுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி...
  • அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் இருக்கும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் திட்டவட்டம்..... கூட்டணி விவகாரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் நிலையாக உள்ளதா? என்றும் கேள்வி.....
  • அரசு பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு... காலமுறை ஊதியத்தின் கீழ், பணி நியமனம் செய்ய முடியாது என்று அறிவிப்பு....
  • மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை, வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • கோடையில் தடையில்லாமல் தமிழகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி.... மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் தகவல்.....
Tags:    

மேலும் செய்திகள்