திடீரென தீப்பற்றி எரிந்த பைக் - அலறி துடித்து ஓடிய சிறுவன்.. நடுங்க வைக்கும் சிசிடிவி
கேரளா மாநிலம் பாலக்காட்டில் சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் சிறுவன் தீக்காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்காடு சந்தப்படி என்ற இடத்தில் ஹம்சா என்பவர் தனது 6 வயது மகனான ஹனானுடன் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, போன் பேசுவதற்காக சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.