விரட்டி விரட்டி கடித்த தெருநாய்.. வலியால் கதறித்துடித்த மாணவி.. அதிர்ச்சி காட்சிகள்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடை பகுதியில்
நடந்து சென்ற மாணவியை தெரு நாய் கடித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மாணவியின் அலறலை கேட்டு ஓடிச்சென்ற பொதுமக்கள், நாயிடமிருந்து, மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் நாய் கடி தொல்லை அதிகரித்து வருவதால் இதற்கு பஞ்சாயத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.