ஆபத்தில் ஜப்பான், ஜெர்மனி.. பயம் காட்டும் இந்தியா - மிரளவிட்ட IMF ரிப்போர்ட்
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, 2024 - 2025 நிதியாண்டின் இறுதியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தையும், 2027 ஆம் ஆண்டு ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் உருவெடுக்கும் என சர்வதேச நிதி நாணயம் தெரிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 105 சதவீதமாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2014 ஆம் ஆண்டு 2 டிரில்லியன் டாலரை தாண்டி இருந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில் அது நான்கு டிரில்லியன் டாலராக இரட்டிப்பாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.