நீதிபதி யஷ்வந்த் வழக்கு..! வெளியான முக்கிய அப்டேட்

Update: 2025-03-27 02:03 GMT

பண கட்டு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரும் மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, மனு மீதான விசாரணை தேதியை பதிவாளர் அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளும்படி மனுதாரரிடம் கூறினார். இது தொடர்பாக பொது வெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்