போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இஸ்ரேலிய பணயக்கைதிகளின் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இஸ்ரேலை சேர்ந்த இரண்டு பணயக்கைதிகள் தோன்றுகிறார்கள். அதில் பேசும் ஒரு பணயக்கைதி, “நாங்கள் இன்னும் விடுதலையாகவில்லை, இங்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என அவர்களுக்கு விளக்குங்கள்“ என தெரிவித்துள்ளார். தனது குழந்தை மற்றும் மனைவியை பார்க்காமல் மிகவும் வேதனையில் இருப்பதாக கூறியுள்ள அவர், தங்களது இந்த நிலையை புரிந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.