கால்நூற்றாண்டுக்கு மேலாக புதின்.." இவரால மட்டும் எப்படி" மிரட்சியில் உலக தலைவர்கள்
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் பொறுப்பேற்று 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, தற்காலிக அதிபராக பொறுப்பேற்ற புதின், அதன் பிறகு தேர்தலை சந்தித்து 2000ம் ஆண்டு இதே நாளில் முதல்முறையாக ரஷ்ய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ரஷ்ய அதிபராகவும், பிரதமராகவும் மாறி மாறி ஆட்சி அதிகார அரியணையில் நீடித்து வருபவர், 25 ஆண்டுகள் கழித்து இன்றும் ரஷ்யாவின் அதிபராக இருப்பது குறிப்பிடத்தக்கது.