இஸ்ரேல் தனது ராணுவத்தின் மூலம் எஞ்சியிருக்கும் பிணை கைதிகளை விடுவிக்க முயற்சித்தால் அவர்களை சவப்பெட்டியில் காண நேரிடும் என ஹமாஸ் இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், பிணை கைதிகளை விடுவிக்காவிட்டால் காசாவின் பல பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஹமாஸ் வசம் இன்னும் 59 பிணை கைதிகள் இருப்பதாகவும், அதில் 24 பேர் உயிருடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.