அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான நட்பு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் தேர்தல்களில் தலையீடு, என அடுத்தடுத்து பல எதிர்ப்புகளை சம்பாதித்த உலக பணக்காரர் எலான் மஸ்கின் டெஸ்லா கார் விற்பனை ஐரோப்பாவில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் ஐரோப்பாவில் டெஸ்லா கார் விற்பனை 45 சதவீதம் சரிந்த நிலையில், சீனாவின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான BYD கார்களின் விற்பனை ஐரோப்பாவில் 94 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.