NH-ஐ ஸ்தம்பிக்க வைத்த மக்கள் - திருத்தணியில் பரபரப்பு

Update: 2025-01-03 08:59 GMT

திருத்தணி நகராட்சியுடன் பட்டாபிராமபுரம் ஊராட்சி இணைப்பை கைவிடக் கோரி பெண்கள் உட்பட கிராம மக்கள் தடையை மீறி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் போது போலீசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது திருத்தணியில் பெரும் பரபரப்பு..

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமபுரம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை திருத்தணி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கிராம மக்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் அவர்களைத் தடுத்த நிறுத்த முயற்சி செய்தனர் அப்போது பொதுமக்களுக்கு மற்றும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து அரசு பேருந்தில் ஏற்றி சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கார்த்திகேயபுரம் ஊராட்சியை திருத்தணி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்