வித விதமாய் வித்தியாசமாய் வினோத கார்கள்...

x

ஒரு காஸ்ட்லி கார ஒட்டிட்டு ஏரியாக்குள்ள கெத்தா என்ட்ரி குடுக்கும் போது வர சந்தோஷம் இருக்கே... அடடா சூர போத...

ரோல்ஸ் ராய்ஸ், ஆடி, பென்ஸ், BMW -னு பல பிராண்டட் கார்கள் இங்க இருந்தாலும், அட அதெல்லாம் வேணாம்பா, எங்களுக்குனு ஒரு தனி ஸ்டைல் இருக்குனு சில பேர் பல வித்தியாசமான கார்கள கண்டுபுடிச்சி அசத்திட்டு இருக்காங்க...

பொதுவா வித்தியாசமான காருனு சொன்னா நம்ம நியாபத்துக்கு வரது இந்த சொப்பனசுந்தரி காருதான்...


அப்பவே வாய பொளந்து பாக்க வச்ச இந்த கார் மாதிரியே பல அறிய படைப்புகள் எல்லாம் இந்த உலகத்துல இருக்கு.

அப்படி கார்ல கைவண்ணத்த காட்டுன கனவான்கள பத்தியும், அந்த வெரைட்டியான கார்கள பத்தியும் தான் இன்னிக்கு இது எப்டி இருக்கு? பகுதியில பாக்க போறோம்...

லிஸ்ட்ல ஃபஸ்ட்ல இருக்க கார்... the P45... என்னடா இத்துனோன்டு இருக்குனு பாக்குறீங்களா? இதுதான் உலகத்துலயே மிகக்குட்டியான கார்...

ஒரே ஒரு ஆள் தான் உக்கார முடியும்....

மினியேச்சர் மாடல்ல இருக்க இந்த கார கண்டுபுடிச்சது லண்டன சேர்ந்த ஜெர்மி கிளார்க்சன். இவரு இதுக்கு முன்னாடி 1990 கால கட்டத்துல p50-னு ஒரு குட்டி கார கண்டுபிடிச்சாரு.

அதுக்கு அப்றம் ரொம்ப வருஷமா மனுஷன் ராப்பகலா தூங்காம யோசிச்சி அத விட குட்டியான இந்த p45-வ உருவாக்கி இருக்காரு.

பாக்குறதுக்கு ஒரு பொம்ம கார் மாதிரி இருந்தாலும், இது 35 கிலோமீட்டர் வேகத்துல பறக்குமாம்.. இந்த கார கண்டுபிடிச்சதுக்கு அப்றம் கிளார்க்சன் ஆபிஸ், லைப்ரரி, டிரைனுனு கார எல்லாத்துக்குள்ளயும் ஓட்டி அசத்தி இருக்காரு.

அட ஆபீஸ் மீட்டிங்ல கூட கிளார்க்சன் கார்ல உக்காந்துட்டு தான் அட்டன் பண்றாருனா பாத்துக்கோங்க... ஆனா இதுல பயணிக்குறவங்களுக்கு பாதுகாப்பு இல்லனு தான் சொல்லனும். ஏன்னா நீங்க கார் ஓட்டும் போது கூட ஹெல்மெட் போட்டுகணும்.

அதுனால கிளார்க்சனோட இந்த முயற்சி ஒரு பெயிலியர் மாடல்னு சொல்லி, கார Beaulieu's World of Top Gear கண்காட்சியில் வச்சிட்டாங்க.

இத நாங்க அனுமதிக்க மாட்டோம்... எந்திரன் டயலாக்...

அதுனால நம்ம சிட்டி மாதிரி இந்த kutty p45 இப்போ கண்காட்சியில காட்சிப்பொருளா ஆயிடுச்சி. அய்யோ பாவம்...

சிட்டியோட குட்டி ஸ்டோரிய கேட்ட உங்களுக்கு அடுத்ததா அறிமுகப்படுத்த போறது உலகத்துலயே மிகவும் நீளமா இருக்குற கார தான்...

என்னடா அனுமார் வாலு மாதிரி இவ்ளோ நீளமா இருக்கேனு பாக்குறீங்களா... இந்த காரோட பேரு “தி அமெரிக்கன் ட்ரீம்“. நீளம் 100 அடி.


பொதுவா காருக்கு நாலு வீலு தான இருக்கும்... ஆனா இந்த காருக்கு மொத்த 24 வீலு இருக்கு... பஸ்ல கூட 55 பேரு தான் உக்கார முடியும், ஆனா இந்த காருல மொத்தம் 75 பேரு உக்காரலாம். உள்ள பாத்தீங்களா... சும்மா வேற லெவல்ல இருக்குல..

இந்த காருல என்ன என்ன ஃபெசிலிட்டிலாம் இருக்கு தெரியுமா.. இதுல ஒரு கோல்ப் கிரௌன்ட் இருக்கு... ஒரு குட்டி ஸ்விம்மிங் பூல் இருக்கு... அட ஹெலிகாப்டர் நிறுத்துற ஒரு ஹெலிபேட் கூட இருக்கு.

இந்த வெள்ளைத்திமிங்கலத்த 1986 ஆம் ஆண்டு ஜே ஓர்பெர்க் என்பவர் உருவாக்கி இருக்காரு. ஆனா அதுக்கு அப்றம் அப்டியே கெடப்புல கிடந்த கார தூசி தட்டி, எடுத்திருக்காரு மைக்கேல் டெஸர். இவர் தான் 100 அடி நீளத்துல பிரம்மாண்டமான இந்த கார வடிவமைச்சி இருக்காரு.

இந்த காரு கின்ன்ஸ் ரெக்கார்டும் படைச்சி இருக்கு...

இப்போ நீங்க இந்த கார பாக்கனும்னா புளோரிடாவின் ஆர்லாண்டோவில் உள்ள டிசர்லாண்ட் பார்க் கார் மியூசியத்துக்கு தான் போகனும். அங்க இந்த கார வச்சி பராமரிக்குறாங்க.

நீளத்திமிலங்கலத்த பாத்த கையோட அடுத்த அதிர்ச்சி இந்த சிவப்பு போன்...

என்னப்பா இவ்ளோ பெரிய போனானு நினைக்குறீங்களா? இது போன் இல்லங்க, போன் மாதிரியே இருக்குற காரு...

அட ஆமாங்க காரு தான்....இதுல பேச முடியாது, ஓட்ட தான் முடியும்...

இந்த டெலிபோன் கார உருவாக்குனது ஹோவர்ட் டேவிஸ். அமெரிக்காவ சேர்ந்த இவருக்கு சின்ன வயசுல இருந்தே போன்கள் மீது அதீத ஆர்வம் இருந்துச்சாம். அத வச்சு உலகத்துலயே பெரிய போன் உருவாக்குவாருனு பாத்தா? போன் மாதிரியே கார உருவாக்கி இருக்காரு.

மத்த கார்ல இருக்க மாதிரியே இந்த கார்லயும் எல்லா வசதியும் இருக்காம்... என்ன ஒரு வித்தியாசம், இதுல நீங்க ஹார்ன் அடிச்சா பேம்பேம்னு அடிக்காதாம்... டெலிபோன் ரிங் மாதிரி ட்ரிங் ட்ரிங்னு தான் அடிக்குமாம்.


டெலிபோன் மனிபோல் சிரிப்பவள் இவளா?

40 வருமா இந்த கார அமெரிக்காவுல இருக்குற பல இடங்களுக்கு ஓட்டிட்டு போய் இருக்காரு ஹோவர்ட் டேவிஸ். ஆனா இதுவரைக்கும் பிரச்சனையே வராம ஓடிட்டு இருக்காம். உலகத்துல இருக்குற தனித்துவமான 10 கார்ல இதுவும் ஒன்னுனு மார்தட்டிகுறாரு நம்ம ஹோவர்ட் டேவிஸ்.

மக்கள் அதிகமா கூடுற இடங்கள்ள காட்சிப்பொருளாவும் இந்த கார் நிறுத்தி வைக்கப்படுது. சரி...சரி... வாங்க நம்மளும் இந்த டெலிபோன் கார்ல ஒரு ஜாலி ரவுண்டு போய்ட்டு வருவோம்...

எப்டி ரெய்டு ஜம்முனு இருந்துச்சுல, அடுத்ததா நாம பாக்கபோறது பனானா....

என்னது வாழப்பழமா....ஆமா...வாழப்பழமே தான்... அந்த ஷேப்ல இருக்கு ஒரு பெரிய கார்....

சூப்பரா இருக்குல...

உலகத்துலயே 4 சக்கரம் இருக்குற ஒரே வாழப்பழ கார் இது தான்....

எல்லாரும் எதையோ ஒன்னு கண்டுபிடிக்கும்போது நானு எதாச்சும் கண்டுபிடிக்கனும்னு மூளைய கசக்கி பிழிஞ்சி இருக்காரு அமெரிக்காவ சேர்ந்த ஸ்டீவ் பிரைத்வைட். அப்போ தான் அவருக்கு இந்த பனானா கார் ஐடியா கிடச்சி இருக்கு.


உடனே ஒரு பழைய டிரக்க விலைக்கு வாங்கி, அத பட்டி டிங்கரிங்லாம் பாத்து, அச்சு அசல் ஒரு வாழப்பழம் மாதிரி உருவாக்கிட்டாரு. இந்த வாழப்பழ வடிவத்த கொண்டு வர எக்கு கம்பி, பாலியூரிதீன் நுரை எல்லாம் பயன்படுத்தி இருக்காரு நம்ம ஸ்டீவ்.

2009-ல வடிவமைக்கப்பட்ட இந்த பனானா காரு,10 அடி உயரமும் 22 அடி நீளமும் கொண்டது.85 கிமீ வேகத்துல பனானா பறக்குமாம்.

இந்த கார உருவாக்க நம்ம ஸ்டீவ், 25 ஆயிரம் டாலர் செலவு பண்ணி இருக்காரு.

மூணு பேரு பின்னாடி உக்காந்துட்டு போற மாதிரி ஸ்டீவ் இந்த கார உருவாக்கி இருக்காரு. மிச்சிகனில் இருந்து மியாமி, ஹூஸ்டன், பிராவிடன்ஸ்னு தலைவரு இந்த பனானா கார ஒரு நடமாடும் டாக்சியாவே மாத்தி வச்சி இருக்காரு. 55 வயசுல மனுஷன் பன்ற வேலைய பாருங்க....

இதுல போறது புதுவிதமான அனுபவமா இருக்குறதால மக்களும் அதிகமா ஆர்வம் காட்டுறாங்க...


என்ன இத நம்ம ஊரு பக்கம் கொண்டு வந்தா இந்த கொரங்கு கூட்டம் சும்மா விடாது... பெரிய சைஸ் வாழப்பழம்னு கூட்டமா வந்து கார கொத்திட்டு போய்டும்...

அப்றம் இந்த பனானா காரும் கின்னஸ் ரெக்கார்டு படைச்சி இருக்கு.

அதுமட்டுமா இந்த கார் குழந்தைகள ரொம்பவே அட்ராக்ட் பண்ணதால, கடைகள்ள இதே மாதிரி பனானா கார் பொம்மையெல்லாம் செஞ்சி விக்குறாங்க...

அடுத்ததா நாம பாக்க போற கார் ஒரு விசித்திரமான கண்டுபிடிப்பு...

என்ன காரு தலைகீழ இருக்குனு தான யோசிக்கிறீங்க... அட இதோட ஸ்பெஷலே அதான்....

இப்படி கரப்பான் பூச்சி மாதிரி கார கவுத்து போட்டு உருவாக்கி கலக்கி இருக்காரு இந்த காரோட ஓனரு... அவரு பேரு ரிக் சல்லிவன்.

அய்யாவுக்கு இந்த ஐடியா எப்படி வந்துச்சுன்னா அதுக்கு ஒரு பெரிய கதையே இருக்கு...

அன்னிக்கு ஒரு நாள் ரோட்ல ஒரு கார் ஆக்சிடண்ட் ஆகி குப்புற கவுந்து கிடந்திருக்கு. அந்த கார டோ பண்ன வந்த வண்டி, குப்புற கிடந்தபடியே இழுத்துட்டு போயிருக்கு.

அட இதுவும் வித்தியாசமா இருக்கேனு யோசிச்ச ரிக், உடனே இரண்டு பழைய மாடல் கார விலைக்கு வாங்கி ஆராய்ச்சியில இறங்கிட்டாரு. ஆறு மாசம் கஸ்டபட்டு ஆறாயிரம் டாலர் செலவு பண்ணி ஒரு வழியா இந்த கரப்பான் பூச்சி கார உருவாக்கி இக்காரு ரிக்.

சிவப்பு வெள்ளனு கலர் கலரா ஜம்முனு கார உருவாக்கி ரோட்டுல கெத்தா ஓட்டிட்டு சுத்திட்டு இருக்காரு மனுஷன். காரும் கலக்கா இருக்கவே ரிக்கோட படைப்ப எல்லாரும் ஆச்சர்யத்தோட பாக்குறாங்க.

இதுவரைக்கும் நாம பாத்த கார் எல்லாமே தரையில மட்டும் தான் ஓடும், ஆனா அடுத்ததா நாம பாக்க போற கார் ஒரு தவள மாதிரி...தரையிலயும் ஓடும், தண்ணியிலயும் நீந்தும்...

அந்த அதிசய காரோட பேரு rinspeed squba car. தண்ணீரில் சீறும் சிறப்பு மகிழுந்து.


பாக்குறதுக்கு கார்டூன்ல வர காமெடி கார் மாதிரி இருக்குற இது 16 வருஷத்துக்கு முன்னாடியே உருவாக்கப்பட்டிருக்கு. இத கண்டுபுடிச்சவரு 64 வயசான Frank M. Rinderknecht.

இந்த கார இவரு உருவாக்க காரணமே ஜேம்ஸ் பாண்ட் தான். "தி ஸ்பை ஹூ லவ்டு மீ" என்ற படத்துல ஜேம்ஸ் பாண்ட் தண்ணியில நீந்துற கார பயன்படுத்தி இருப்பாரு. அந்த படத்த பாத்த உடனே நம்ம ஃப்ராங் மனசுல உதித்த ஒரு யோசன தான் இந்த squba car-அ கண்டுபிடிக்க வச்சி இருக்கு.

தரையில சிறுத்த மாதிரி சீறிப்பாயுற இந்த காரு, தண்ணியில சுறா மாதிரி நீந்தி போகும். ஆக்சிஜன் மாஸ்க் மாட்டிட்டு தண்ணிக்குள்ள இறங்குனா போதும், அவதார் the way of water உலகத்துக்குள்ள நுழஞ்ச மாதிரியே இருக்கும்.


Next Story

மேலும் செய்திகள்