பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிப்பாரா என்ற கேள்வியுடன் விவரிக்கிறது இந்த தொகுப்பு
2024 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கியது...
காலை 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தனது பேச்சை தொடங்கினார்.
அப்போது தனது உரையை வாசிக்காமல், தேசிய கீதம் குறித்த சில கருத்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டு, இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன் என்று கூறி விடைபெற்று இருக்கையில் அமர்ந்தார் அவர்.. இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது
இருந்த போதிலும் சற்று நேரத்தில் விறுவிறுவென ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியே நடந்து சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்கும் மேலாகப் பேசு பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல கடந்த 2023ம் ஆண்டும் சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி பாதியிலேயே எழுந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கூடும் கூட்டத்தில் ஆளுநராக ரவி 3வது முறையாக கலந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக சட்ட மன்றத்தின் இந்த ஆண்டுக்கான
முதல் கூட்டத் தொடர் வருகின்ற ஆறாம் தேதி கூட இருக்கிறது. இதற்கான முறைப்படியான அழைப்பை ஆளுநருக்குச் சபாநாயகர் அப்பாவு நேரடியாக சென்று அழைப்பு விடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிப்பாரா என்றும் அரசுடன் மோதல் போக்கு தொடர்கிறதா என் அரசியல் ஆர்வலர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயல் நிவாரணம், பொங்கல் ரொக்கப் பணம் வழங்கப்படாதது, சட்ட ஒழுங்கு பிரச்சினை, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேரவையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக நடைபெற உள்ள கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளால் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்ட வரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.. இப்படி பரபரப்பான சூழலில் சட்டமன்றம் கூடும் சூழலில் எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் விவாதங்களும் காரசாரமாகவே கூட்டத்தை கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.