`தினத்தந்தி'-யின் கலாச்சார நடை திருவிழாவை துவக்கி வைத்த கலெக்டர்... களைகட்டிய கோவை

Update: 2025-01-05 09:08 GMT

`தினத்தந்தி'-யின் கலாச்சார நடை திருவிழா..

துவக்கி வைத்த கலெக்டர்... களைகட்டிய கோவை

தமிழ் மக்கள் அன்பை கண்டு வியந்த ஃபாரினர்

கோவையில் 'தினத்தந்தி' சார்பில் நடைபெற்ற கலாச்சார நடை திருவிழாவில் பாரம்பரிய உடையணிந்து வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் ஒய்யாரமாக வலம் வந்தனர்...

கோவை பந்தய சாலை மீடியா டவர் அருகே தினத்தந்தி, ஹலோ எஃப்எம், தந்தி டிவி சார்பில் கலாச்சார நடைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது...

தமிழர்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில், வள்ளி கும்மி நடனம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையிடை, நாடகம் என கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பொங்கல் பானை, கரும்பெல்லாம் வைத்து... மாட்டு வண்டியையும் நிறுத்தி வரவேற்பளிக்கப்பட்டது. கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்... நிகழ்ச்சியில் வெளிநாட்டினரும் கலந்து கொண்டு வேட்டி, சேலையுடன் வலம் வந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில், தமிழர்களின் கலாச்சாரத்தை அழகாக வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்