ஞானசேகரன் பேசிய போன் கால் INCOMING-ஆ & OUTGOING-ஆ அனல் பறக்க நடந்த விசாரணை | Chennai

Update: 2025-01-05 09:36 GMT

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரின் வீட்டிற்கு சென்று 6 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி 2 அட்டை பெட்டிகளில் ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், சொத்து ஆவணங்கள், பட்டாக்கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து சென்றனர். குறிப்பாக ஞானசேகரின் 2 மனைவிகளிடமும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். ஞானசேகரன் வைத்திருந்த ஜீப் மற்றும் மற்றொரு வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, பைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை செலுத்தாததால் அவர்கள் பறிமுதல் செய்து சென்றது தெரிய வந்தது. ஞானசேகருக்கு கை மற்றும் கால் உடைந்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கஸ்டடிக்கு செல்ல முடியாத நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று நேரில் சென்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஞானசேகரன் வீட்டை சோதனை செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்து சென்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து மீண்டும் ஞானசேகரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது 2 செல்போன்களும் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சமயத்தில் ஒரு நபர் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அந்த போன் கால் இன்கமிங் காலா அல்லது அவுட்கோயிங் காலா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞானசேகர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்