கன்னத்தில் அறைந்த சப் இன்ஸ்பெக்டர்.. போராட்டத்தில் பேரதிர்ச்சி - ஷாக் வீடியோ

Update: 2025-01-05 09:42 GMT

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெஞ்சல் புயல் நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நபரை, சப் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலம் அடுத்த அகூர் கிராம மக்கள் புயல் நிவாரணம் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மயிலம் போலீசார், போராட்டக்கார‌ர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை மயிலம் காவல் உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்த‌தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்