வேலூரில் திடீர் ED ரெய்டு - பின்னணி என்ன?

Update: 2025-01-03 08:29 GMT

வேலூர் மக்களவை தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட 11 கோடியே 48 லட்சம் ரூபா​ய் பணம் தொடர்பாக, வங்கி அலுவலர்கள் மீது கடந்த 2020 செப்டம்பரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

கனரா வங்கியின் துணைப் பொது மேலாளரும், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியுமான விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபரான கனரா வங்கியின் மண்டல அலுவலகத்தில் அப்போதைய முதுநிலை மேலாளராக பணியாற்றிய தயாநிதி, பொது அலுவலராக இருந்து கொண்டு, வேண்டப்பட்ட நபர்களுடன் கூட்டு சதி செய்து, குற்றத்தில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் குளறுபடி செய்து புதிய 200 ரூபாய் நோட்டுகளை வழங்கி உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட 2-வது நபரான ஸ்ரீனிவாசன் காட்பாடி-பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர்.

குற்றம்சாட்டப்பட்ட 3-வது நபரான தாமோதரன், கனரா வங்கியின் முன்னாள் முதுநிலை மேலாளராக இருந்தவர். இவர் ஸ்ரீனிவாசனின் உறவினர் என்பது தெரியவந்தது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவரது வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. மூவருக்கு எதிராகவும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சி.பி.ஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை தொடங்கி, வேலூரில் சோதனை நடத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்