"வேறு கட்சியில் இருந்து வரும் அழைப்புகள்..." - DGP-யிடம் புகார்.. போட்டு உடைத்த வேல்முருகன்
கடலூர் முதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தமிழக டிஜிபியிடம் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் மனு அளித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மற்றும் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரியும் அவர் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேல்முருகன், சட்ட ஒழுங்கு தொடர்பான தனது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழக டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிவித்தார். கூட்டணியில் இருப்பதற்கும், மக்கள் பிரச்சனைக்காக போராடுவதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் கூறினார்.