தொகுதி மறுசீரமைப்பு - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் | Fair Delimitation
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு, தமிழ்நாட்டின் அடையாளங்களை பறைசாற்றும் விதமாக சிறப்பு பரிசு பெட்டகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அந்த பரிசு பெட்டகத்தில், பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன.