தமிழகத்தை உலுக்கிய திடீர் மரணம் - அதிர்ச்சியில் இருந்து மீளாத தலைவர்கள்
நடிகர் மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயதில் மனோஜ் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்றும், அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றதாக
தெரிவித்துள்ளார். மனோஜ் பாரதி உடல்நலக் குறைவால் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தமளிப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மனோஜ் பாரதி மறைந்த செய்தியறிந்து துயருற்றதாக கூறியுள்ள திமுக எம்.பி கனிமொழி, இந்த துயர்மிகு வேலையில் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மகன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இரங்கல் தெரிவித்துள்ளார்.