திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக துணைத் தலைவர் மற்றும் திமுக நகர செயலாளர் மீது முறைகேடு புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டன. இதில் அதிமுக துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் மற்றும் திமுக நகர செயலாளர் ஜான் கென்னடி ஆகிய இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது அதிமுக வார்டு செயலாளர்கள் 6 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.