சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். தனது பாதுகாவலர் ஓடிவந்து கொடுத்த ஃபைலை, சுவாமி முன்பு வைத்து வழிபட்ட ஓபிஎஸ், வட்டப்பாறை அம்மன் மற்றும் வடிவுடை அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார்.