தமிழகத்தில் உதயமாகும் 2 புதிய மாநகராட்சிகள்?

Update: 2025-03-26 03:19 GMT

இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீது பதில் அளித்து பேசிய அவர், மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இராமநாதபுரம், விவசாயம் சார்ந்த வணிகம் மற்றும் அபரிதமான தொழில் வளர்ச்சியினை கொண்டுள்ள பெரம்பலூர் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்