திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சிலை அமைக்க, பாமக எம்எல்ஏ சொந்த தன் சொந்த நிதியை வழங்கியுள்ளார். சேலம் மாவட்ட பாமக எம்எல்ஏ அருள், மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சேலத்தில் சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், இடம் வாங்கி தந்தால் சிலை அமைத்து தரப்படும் என கூறிய நிலையில், பாமக எம்எல்ஏ அருள், சிலை அமைக்க தன் பத்து மாத சம்பளத்தை தருவதாக கூறியுள்ளார்.