கோயில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களுக்கான வரியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி குழு பரிசீலித்து வருகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதி மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்களுக்கு பதிலளித்த அவர், எந்த ஒரு மாநிலத்திற்கும் மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் இல்லை என தெரிவித்தார்.