சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலிப் பதவியிடங்கள் உட்பட 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 133 காலிப்பதவியிடங்களுக்கும் வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலிப் பதவியிடங்களுக்கும் இடைக்காலத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.