வேற லெவலில் மாற போகும் மெரினா பீச் - அமைச்சர் KN நேருவின் தரமான அறிவிப்பு
நீலக்கொடி கடற்கரை திட்டம் மூலம் 6 கோடி ரூபாய் செலவில் மெரினா கடற்கரை தரம் உயர்த்தப்படவுள்ளதாக சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீது பதில் அளித்து பேசிய அவர்,
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் இதுவரை 966 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 48 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 397 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 103 பணிகள் நடைபெற்றும் வருவதாகவும் அவர் தெரிவித்தார். மாற்று திறனாளிகள் கடலின் அழகை அருகில் சென்று ரசிக்கும் வண்ணம், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மர நடைபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.