கார் மீது அதிவேகத்தில் வந்து மோதிய லாரி.. உடல் நசுங்கி பலியான 2 உயிர்கள்

Update: 2025-03-24 13:45 GMT

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சுங்கச்சாவடியில் நின்றுக்கொண்டிருந்த கார் மீது சரக்கு லாரி வேகமாக மோதியதில், காரில் இருந்த 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். டேராடூனில் உள்ள லச்சிவாலா சுங்கச்சாவடியில் வாகனங்கள் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தபோது, லாரி ஒன்று ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் கார் நசுங்கி அதிலிருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்