அப்படியே டபுளாக உயரும் ஊதியம் - முக்கிய அறிவிப்பு

Update: 2025-03-27 03:36 GMT

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கான ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும், சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்