பெற்ற மகளை சீரழித்த தந்தை எனும் கொடூரனுக்கு சாகும் வரை தண்டனை விதிப்பு

Update: 2025-03-27 04:06 GMT

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தவளக்குப்பம் அருகே கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டார். அதன் விசாரணை முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்