திணறும் உ.பி மதுக்கடைகள்.. "ED.. கொஞ்சம் இப்படி வாங்க.." எதிர்பாராமல் வந்த குரல்

Update: 2025-03-27 03:34 GMT

உத்தரப் பிரதேசத்தில் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விதிகளின்படி, மதுபான ஒப்பந்ததாரர்கள் தங்கள் முழு இருப்பையும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும். இல்லையெனில் மீதமுள்ள மதுபானங்கள் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்பட்டு, அதன் விற்பனை தடை செய்யப்படும். இதனால் மதுபான விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ஆஃபரை அறிவித்துள்ளனர். இதனால் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்