தீப்பிடித்து எரிந்த லைட்டர் - வெளியே தூக்கி வீசியதும் பூமி அதிர கேட்ட பயங்கர சத்தம்
கேரளாவில் நகைக்கடையில் இருந்த கேஸ் லைட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், தூக்கி வீசப்பட்டதும் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புறத்திலுள்ள நகைக்கடை ஒன்றில் ஊழியர் நகையை உருக்க பயன்படுத்தும் கேஸ் லைட்டர் எடுத்து இயக்கி உள்ளார். அப்போது, கேஸ் கசிவு காரணமாக திடீரென கேஸ் லைட்டர் தீ பிடித்து எரிந்தது. இதனையடுத்து எரிந்த லைட்டரை உடனடியாக ஊழியர் தூக்கி வெளியே வீசிய போது, லைட்டர் வெடித்து சிதறியது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது