கேரள மாணவிக்கு ஓடும் பேருந்தில் அதிர்ச்சி.. சிசிடிவியில் சிக்கிய மர்ம இளைஞர்

Update: 2025-03-27 03:51 GMT

கேரளாவில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவியின் கைப்பையை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பாத்திமா என்ற கல்லூரி மாணவி பெங்களூருவில் இருந்து தனியார் பேருந்தில் கண்ணூருக்கு பயணம் செய்துள்ளார். அப்போது, இயற்கை உபாதை கழிக்கச் சென்று விட்டு திரும்பியபோது, மாணவியின் கைப்பை காணாமல் போயிருந்தது. இது குறித்து மாணவி புகாரளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்திலிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, மர்ம நபர் ஒருவர் பையை திருடிச் சென்றது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்