கடந்த 21-ம் தேதி பத்தின காட்டுத் தீ, இப்போ வர தொடர்ந்து எரிஞ்சுட்டு இருக்கு. 12 வெவ்வேறு பகுதிகள்ல இந்த காட்டுத் தீ பரவியிருக்க நிலைல, 36 ஆயிரம் ஏக்கர் நிலம் தீக்கிரையாகியிருக்கு. அதுமட்டுமில்லாம மூவாயிரம் பொதுமக்கள் முகாம்கள்ல தங்க வைக்கப்பட்ருக்க சூழல்ல, 3 தீயணைப்பு வீரர்கள் உள்பட 4 பேர் இறந்துருக்காங்க, இன்னும் 11 பேர் படுகாயமடஞ்சு இருக்காங்க. 110 ஹெலிகாப்டர்கள் உதவியோட 6 ஆயிரத்து 700 தீயணைப்பு வீரர்கள் தீய அணைக்க போராடிட்டு இருக்காங்க. சேதங்கள கணக்கிட்டா, இது அந்த நாட்டோட 3-வது மிகப்பெரிய தீ விபத்துன்னு சொல்றாங்க.