இன்று மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நல குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சனிக்கிழமையன்று காலை 8 மணி வரை மன்மோகன் சிங்கின் உடல் அவரது இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு, 8.30 மணியில் இருந்து காங்கிரஸ் கட்சியினரும், தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.