அதிவேகமாக வந்த கார்.. தட்டிக்கேட்ட SI-ஐ ஆத்திரத்தில் எகிறி அடித்த இளைஞர்கள் - பரபரப்பு

Update: 2025-03-24 02:48 GMT

புதுச்சேரியில் அதிவேகமாக கார் ஓட்டி வந்ததை தட்டிக்கேட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை 2 இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து உதவி ஆய்வாளர் குமார் தனது நண்பர் குமரவேலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த கார், மோதுவது போல் வந்து நின்றதால் அதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த காரில் வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த தீபன் என்பவரும், முதலியார்பேட்டையைச் சேர்ந்த சம்ரூதன் என்பவரும், குமார் மற்றும் அவருடைய நண்பரை தாக்கி விட்டு காரில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்