``ஜோக் அடிச்சது குத்தமா?'' - காமெடி நடிகர் ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஷிண்டே கட்சியினர்
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா Kunal Kamra சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக்கூறி, அவரது ஸ்டூடியோவை ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.
அங்கிருந்த நாற்காலிகள், மேஜைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கினர்.
கம்ரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஷிண்டே தரப்பினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.