ஏணியை போட்டு எஸ்கேப- ஆன கைதி.. பிடிபட்டவுடன் சொன்ன போலீஸையே கலங்கவிடும் காரணம்
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்திய சிறையிலிருந்து தப்பி சென்ற விசாரணை கைதியை, ஆந்திர மாநிலம் காக்கிநாடா ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிறையில் அடைத்தவுடன் ஏற்பட்ட மன அழுத்தத்தால், பெயிண்டிங் பணி நடைபெற்று கொண்டிருந்த போது, அங்கிருந்த ஏணி மற்றும் கயிற்றை பயன்படுத்தி தப்பி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்..