7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், புதுச்சேரி தலைமை பொதுப்பணித்துறை அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். காரைக்காலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம், அதிகாரிகளின் வீடுகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள தலைமை பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சுமார் 20 மணிநேரம் விசாரணை நடத்தினர். தனியார் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், புதுச்சேரி மாநிலத்தின் தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டிட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.