ஷிண்டே விவகாரத்தில் கொந்தளித்த பட்னாவிஸ்

Update: 2025-03-24 11:41 GMT

Stand Up Comedy என்கிற பெயரில் ஏக்நாத் ஷிண்டே இழிவுபடுத்தப்பட்டதை சகித்துக் கொள்ள முடியாது என, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ஸ்டாண்ட் அப் காமடியன் குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் கிண்டல் செய்தது சர்ச்சையாகியுள்ளது. குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடந்த நட்சத்திர ஹோட்டலை சிவசேனா தொண்டர்கள் சூறையாடியுள்ளனர். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே அவமானப்படுத்தப்பட்டதை கண்டிப்பதாக பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்