"பெண்களுக்கு பிரதமர் மோடி அறிவித்த மாதம் ரூ.2,500 என்னாச்சு?" - வெடித்த போராட்டம்
டெல்லியில், பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என, டெல்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான போராட்டத்தில் பங்கேற்ற அவர், தேர்தலுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்றும், இதுவரை பெண்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்றும் பணத்திற்காக அவர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.