`மும்மொழி கொள்கை' மக்களவையில் மத்திய அரசு சொன்ன பதில்

Update: 2025-03-24 11:33 GMT

மும்மொழி கொள்கை என்கிற பெயரில், எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, மும்மொழி கொள்கையில் பல்வேறு நெகிழ்வுத்தன்மை இருப்பதாக தெரிவித்தார். குழந்தைகள் கற்கும் மூன்று மொழிகள், அந்தந்த மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பங்களாக இருக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்