ஜார்ஜியா நாட்டில், 33 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் மீது நீரின் மேற்பரப்பில், பைக்கை ஓட்டி சாதனைப்படைத்துள்ளார். மோட்டார் சைக்கிள் சாகச வீரரான ஜியோர்ஜி ககேலட்ஸே (Giorgi Gakheladze ) இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தண்ணீர் மீது பயணம் செய்யும் வகையில் பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில், கருங்கடல் மீது 33 கிலோ மீட்டர் தூரத்திற்கு, நீரின் மேற்பரப்பில் அதிவேகமாக அவர் பயணம் செய்துள்ளார். இதற்காக, 6 மாதம் பயிற்சி மேற்கொண்டதாக ககேலட்ஸே தெரிவித்தார்.